ஈழப் படுகொலையையே தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே... சொல்கிறார் ஞானதேசிகன்
சென்னை: 2009ம் ஆண்டு ஈழப் போர் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபா தேர்தல் வந்தபோது அதிலேயே அந்தப் பிரச்சினை எதிரொலிக்கவில்லை. தமிழக மக்கள் அதைப் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே தற்போதைய காமன்வெல்த் பி்ரச்சினையும் 2014ம் ஆண்டு வரப் போகும் லோக்சபா தேர்தலி்ல் எதிரொலிக்காது என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தமிழகத்தில் நிலவி வரும் மனப்பாங்கு குறித்தும், கட்சிகளின் எதிர்ப்புக் குரல் குறித்தும் அவர் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஞானதேசிகனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு...

இது ஒரு பிரச்சினையே இல்லை
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்பது நிச்சயம் தேர்தல் பிரச்சினை அல்ல. 2014 தேர்தலிலும் இது எதிரொலிக்காது.

தமிழர் படுகொலையையே மறந்தவர்கள் தமிழ்நாட்டவர்கள்
2009ம் ஆண்டு ஈழப் போர் முடிந்த சில நாட்களிலேயே லோக்சபாவுக்குத் தேர்தல் வந்தது. அதில் அந்தப் பிரச்சினை எதிரொலிக்கவில்லை. தமிழக மக்கள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.இப்போதும் அப்படித்தான் நடக்கும்.

தனிமைப்படுத்தப்பட்டால்...
சல்மான் குர்ஷித் இலங்கைக்குப் போயிருப்பதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்படும் என்று நான் கருதவில்லை. ஒரு வேளை அப்படி நடந்தாலும் கூட அது தற்காலிகமானதாகவே இருக்கும்.

தமிழக தீர்மானத்தை மதித்தார் பிரதமர்
உண்மையில் தமிழக சட்டசபைத் தீர்மானத்தை பிரதமர் மதிக்கவே செய்துள்ளார். இதனால்தான் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. சல்மான் குர்ஷித்தை மட்டும் அனுப்பியதற்குக் காரணம், இலங்கையுடன் இணைந்து தமிழர் பகுதிகளில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

மீனவர் பிரச்சினையையும் தீர்ப்போம்
அதேபோல தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கும், மாநாடு முடிவடைந்த பின்னர், இந்தியா தற்போது இலங்கையில் மேற்கொண்டு வரும் பணிகள் முடிவடைந்த பின்னர் சுமூகமாக தீர்க்கப்படும்.

கூட்டணி குறித்து பிறகு யோசிப்போம்
தமிழகத்தில் கூட்டணி குறித்து இப்போது யோசிக்க வேண்டியதில்லை. இன்னும் அவகாசம் இருக்கிறது என்றார் ஞானதேசிகன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications