தேவர் ஜெயந்தியையொட்டி இன்று திமுக, தேமுதிக சார்பில் மரியாதை!
தேவர் ஜெயந்தியையொட்டி இன்று திமுக, தேமுதிக சார்பில் மரியாதை!
சென்னை: தேவர் ஜெயந்தியையொட்டி இன்று சென்னை நந்தனம் சிக்னல் அருகில் உள்ள தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. அதேபோன்று தேமுதி தலைவர் விஜயகாந்த் அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை தொடங்கிய தேவரின் குருபூஜை விழா, ஆன்மிக விழா, முளைப்பாரி, பால்குடம், அபிஷேகம், லட்சார்ச்சனை என பூஜை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து இன்று, தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர். அதே போன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவின் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் என பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் நந்தனம் சிக்னல் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திமுக சார்பில் ராஜ்யசபா உறுப்பினரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், எம்.பி. ஆர்எஸ் பாரதி, எம்.பி. டிஆர் பாலு ஆகியோர் நந்தனத்திற்கு சென்று தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.
அதே போன்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கட்சி அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கம் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications