மதுரையில் தேவர் சிலைக்கு பொன். ராதாகிருஷ்ணன், மு.க. ஸ்டாலின், வைகோ மாலை அணிவித்து மரியாதை
தேவர் ஜெயந்தியையொட்டி இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மதிமுக பொதுச்செயலாரும் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
மதுரை: தேவர் ஜெயந்தியான இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது. இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுகவின் பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். மேலும், தேவர் ஒரு நேர்மையான அரசியல் தலைவர் என்று வைகோ தெரிவித்தார்.

இதே இடத்தில் பாஜக சார்பில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.
அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து செல்வதால், ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதாலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications