க்ளீன் ஸ்வீப்.. தருமபுரியில் படுதோல்வி அடைந்தார் பாமக சவுமியா அன்புமணி .. திமுக ஆ.மணி இமாலய வெற்றி!
தருமபுரி: லோக்சபா தேர்தல் 2024 முடிவுகளில் தருமபுரியில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தருமபுரியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றுள்ளது.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தவர், அதன்பின் பின்னடைவை சந்தித்தார். சில சுற்றுகள் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்த நிலையில், கடைசியில் படுதோல்வி அடைந்தார். சவுமியா அன்புமணி 3,23,583 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக மணி 3,43,827 வாக்குகள் பெற்று வென்றார்.
தருமபுரி தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாகும். அதிலும் இந்த முறை தருமபுரியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தருமபுரியில் சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் செந்தில் குமார் சமூக வலைத்தளங்கள் மூலமும், எம்பி நிதி மூலமும் பலரின் மருத்துவ செலவிற்கும், பல்வேறு படிப்பு தொடர்பான செலவுகளுக்கும் செந்தில் உதவி செய்து வந்தார். ஆனாலும் தொகுதியில் இவரின் பெயர் , கட்சி நிர்வாகிகள் இடையிலான இவரின் உறவு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது தருமபுரி சிட்டிங் எம்எல்ஏ டாக்டர் செந்தில் குமாருக்கு சீட் மறுக்கப்பட்டு ஆ மணி என்ற புதியவர் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களமிறக்கப்பட்டார்.
கள நிலவரம் எப்படி?: வழக்கறிஞரான ஆ மணிக்கு அங்கே சாதகமான சூழ்நிலை நிலவி வந்தது. இங்கே பாஜக கூட்டணியில் தருமபுரி லோக்சபா தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுகிறார் சவுமியா அன்புமணி. இவர்கள் இருவரும் போக இங்கே நாம் தமிழர் சார்பாக டாக்டர் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக ஆர் அசோகன் போட்டியிடுகிறார்.
சவுமியாவின் மாமனார் பாமக நிறுவனர், கணவர் அன்புமணி ராமதாஸ் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் லோக்சபா எம்பி, மாநிலங்களவை எம்பி, பாமக தலைவர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்து வருகிறார். இங்கே அன்புமணி களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதி வேட்பாளராக பாமக சார்பாக அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதன்பின் அவர் மாற்றம் செய்யப்பட்டு சவுமியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர்களுக்கு இடையில் அங்கே கடுமையான போட்டி நிலவி வந்தது. கள நிலவரப்படி பார்த்தால் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையே அங்கே இருந்தது. தருமபுரியில் கள நிலவரம் திமுக வேட்பாளர் ஆ மணிக்கு ஆதரவாக இருந்தாலும், சில இடங்களில் களப்பணிகள் கடைசி கட்டத்தில் தொய்வு அடைந்ததாக கூறப்படுகிறது.
முக்கியமாக வன்னிய வாக்காளர்கள் சவுமியாவிற்கு ஆதரவாக அதிக அளவில் களமிறங்கி இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் கடைசியில்தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தவர், அதன்பின் பின்னடைவை சந்தித்தார். சில சுற்றுகள் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி முன்னிலை வகித்த நிலையில், கடைசியில் படுதோல்வி அடைந்தார். சவுமியா அன்புமணி 3,23,583 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். திமுக மணி 3,43,827 வாக்குகள் பெற்று வென்றார்.
அதிமுக அசோக் இங்கே 232936 வாக்குகளும் , நாம் தமிழர் அபிநயா 55 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.
கடந்த தேர்தல் நிலவரம்; கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவின் அன்புமணி ராமதாஸை எதிர்த்து செந்தில் 574,988 வாக்குகள் பெற்று வென்றார். அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
கடந்த 10 லோக்சபா தேர்தல்களில் இங்கே அதிமுக 2, திமுக 2, பாமக 4, காங்கிரஸ் 1, தமிழ் மாநில காங்கிரஸ் 1 தேர்தல்களில் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications