For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் உயிர் தப்பியதே பெரிய விஷயம்.. அமைச்சர் சரோஜா மிரட்டல் பற்றி பெண் அதிகாரி கண்ணீர்

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தன்னை பணியை விட்டு விலகுமாறு மிரட்டியதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி மினாட்சி தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பணியை ராஜினாமா செய்து விட்டு செல்லுமாறு அமைச்சர் சரோஜா தன்னை மிரட்டியதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி மீனாட்சி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரியாக உள்ள அதிகாரி மீனாட்சி குழ்ந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்பாக செயல்பட்டதால் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசுப் பணியை பெற்றுள்ளார் மீனாட்சி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிகாரி மீனாட்சியை அந்தப் பணியை விட்டு செல்லுமாறு அமைச்சர் சரோஜா தன்னைம மிரட்டியதாக மீனாட்சி சன் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 Dharmapuri social welfare department officer made bribe allegations against Minister Saroja

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலில் நன்னடத்தை அதிகாரி மூலம் தொந்தரவு கொடுத்ததாகவும், அதன் பின்னர் தன்னை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கே அழைத்து மிரட்டல் விடுத்ததாக மீனாட்சி கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் சரோஜா அதிகாரி மீனாட்சியை அழைத்து ஏக வசனத்தில் திட்டியதாகவும், அமைச்சரின் கணவரும் தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

மீனாட்சி வகிக்கும் பதவிக்கு ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்க பலர் தயாராக இருப்பதாகவும், ஆனால் எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தாலும் பணியை விட்டு விலகாததற்காக மீனாட்சியை அமைச்சர் சரோஜாவும் அவரது கணவரும் மிரட்டியதாக அதிகாரி மீனாட்சி குற்றம்சாட்டியுள்ளார்.

பணியை விட்டு தானே செல்லும் வரை விட மாட்டேன் என்று மிரட்டியதோடு கொலை செய்யவும் தாங்கள் தயங்க மாட்டோம் என்றும் மிரட்டப்பட்டதாக மீனாட்சி கூறியுள்ளார். "நான் உயிர் பிழைத்ததே கடவுளின் ஆசி தான் என்றும், அமைச்சர் என்னை மிரட்டியதைத் தொடர்ந்து அமைச்சர் வீட்டின் வெளியே வந்து நான் அழுத காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிளில் பதிவாகியுள்ளது என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

English summary
Tn social welfare department officer Meenakshi made allegations against minister Saroja that she asked bribe for her job or else resign from job
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X