அப்பல்லோவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்
சிகிச்சை முடிந்ததையடுத்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்ததையடுத்து வீடு திரும்பினார்.
தயாளு அம்மாள் வயது முதிர்வு காரணமாக கடந்த சில வருடங்களாகவே கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவர் மேலும் சோகத்திலும் துயரத்திலும் இருந்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தயாளு அம்மாள் அனுமதித்தவுடனேயே ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி, மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். நேற்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனை சென்று தயாளு அம்மாள் உடல்நலம் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், தயாளு அம்மாளின் உடல்நிலை நேற்று பிற்பகலுக்கு பின்னர் சீராக இருக்க தொடங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications