டோணி எனக்கு பிறகு பல பெண்களை காதலித்தார்: கொளுத்திப் போடும் ராய் லட்சுமி
சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி தன்னை அடுத்து பல பெண்களை காதலித்ததாக நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை பற்றிய படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி வரும் 30ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை ராய் லட்சுமி கூறியிருப்பதாவது,

டோணி படம்
டோணி படத்தில் என் கதாபாத்திரம் உள்ளதா என்று மக்கள் என்னிடம் ஏன் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. எனக்கும், டோணிக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை.

ஜிவா
டோணிக்கு திருமணமாகி குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ளார். அவரை பற்றிய படம் ரிலீஸாக உள்ள நிலையில் என்னை பற்றி ஏன் பேசுகிறார்கள் என தெரியவில்லை.

ஐபிஎல்
2008ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லின் போது நான் சென்னை அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தேன். நானும் டோணியும் ஓராண்டுக்கும் குறைவாகவே டேட் செய்தோம். எங்களுக்குள் ஒர்க்அவுட் ஆகாமல் பிரிந்துவிட்டோம்.

பல பெண்கள்
டோணி ஒன்றும் அவர் வாழ்வில் என்னை மட்டும் காதலிக்கவில்லை. எனக்கு பிறகு பிற பெண்களை காதலித்துள்ளார். பெண்கள், உறவுகளை தாண்டியது தான் வரலாற்று படம் என்கிறார் ராய் லட்சுமி.

காதல்
டோணியை காதலித்ததாக ராய் லட்சுமி அவ்வப்போது கூறி வருகிறார். ஆனால் அப்படி ஒன்று நடந்ததாக இதுவரை டோணி ஒரு முறை கூட தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications