கடைசி வரை வாழ்த்தவே இல்லையே அப்பா.. காத்திருந்து ஏமாந்த மு.க. அழகிரி!
மதுரை: தன்னை தனது தந்தையான திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளன்று வாழ்த்துவார் என்று மு.க.அழகிரி வெகுவாக எதிர்பார்த்திருந்தாராம். ஆனால் கடைசி வரை கருணாநிதியிடமிருந்து பிறந்த நாள் வாழ்த்து வரவே இல்லை என்பதால் அழகிரி மிகவும் வருத்தப்பட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.
திமுகவின் ஸ்டிராங் மேன் என்று அழைக்கப்பட்டவர் மு.க.அழகிரி. தென் மாவட்ட திமுக என்றால் அது அழகிரிதான் ஒரு காலத்தில். தனது தம்பி மு.க.ஸ்டாலினுடன் கடுமையான கோஷ்டிப் பூசலில் இருந்து வந்தாலும் கூட தற்போது அதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்ட மு.க.அழகிரி தற்போது வெறும் தலைவராக மதுரைக்கும், சென்னைக்குமாக உலா வந்து கொண்டுள்ளார். மீண்டும் அவரை திமுகவில் சேர்க்க குடும்பத்துக்குள்ளேயே கடுமையான முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால் மு.க.ஸ்டாலின் ஆதரவு குடும்ப உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பிறந்த நாள்
இந்த நிலையில் நேற்று அழகிரி தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் கொண்டாடினார் என்பதை விட அவரது ஆதரவாளர்கள்தான் தடபுடல் செய்து விட்டனர்.

மதுரையே குலுங்கியது
மதுரையே குலுங்கியது என்பது போல போஸ்டர்களாலும், ஆடல் பாடலுடன் கூடிய வரவேற்பாலும் மதுரையே திணறிப் போனது.

ஊரெல்லாம் உன் பாட்டுதான்
மதுரையில் நேற்று அழகிரி ஆதரவாளர்கள் செய்த தடபுடலைப் பார்த்து, பரவாயில்லைண்ணே, அண்ணன் இன்னும் செல்வாக்காதான் இருக்காப்ல என்று பலரும் பேசிக் கொண்டனர்.

உன் வாழ்த்து எங்கே தந்தையே!
இப்படி ஊரே கூட தன்னை வாழ்த்தியபோதும் அழகிரி மட்டும் இன்னொரு வாழ்த்தை எதிர்பார்த்து பெரும் ஆவலுடன் காத்திருந்தாராம். அது தனது தந்தை கருணாநிதியின் வாழ்த்து.

என்னை மறந்ததேன்!
ஆனால் கடைசி வரை கருணாநிதியிடமிருந்து அழகிரிக்கு வாழ்த்து வரவில்லை என்கிறார்கள். இதனால் அழகிரி சற்று வேதனைப்பட்டார் என்றும் சொல்கிறார்கள். அதேசமயம், தாயார் தயாளு அம்மாள் தொலைபேசியி்ல் வாழ்த்தியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications