எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை முதல்வர் ஈபிஎஸ் இழந்துவிட்டார்- தங்க தமிழ்செல்வன் அதிரடி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.எல்.ஏக்களின் ஆதரவை இழந்துவிட்டதால் அவரை மாற்ற வேண்டும் என பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் கூறி
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க. தமிழ்செல்வன் கூறினார்.
இன்று காலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தனர். அதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் கூறியதாவது:
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடிதம் கொடுத்தோம். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறினார்.

ஒபிஎஸ்ஸுக்கு ஏன் திடீர் ஆதரவு?
அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ஆனால், வெறும் 9 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள ஓபிஎஸ்ஸுக்கு திடீரென துணை முதல்வர் பதவி ஏன் கொடுக்க வேண்டும்?

மீண்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்?
அவர் தானே இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்தார். கட்சியை விட்டு வெளியே போன அவரை மீண்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்?

எங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை?
ஆனால் எங்களிடம் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எங்களை ஏன் எந்த விஷயத்திலும் கலந்தாலோசிப்பது இல்லை. சுயநலத்துக்காக அதிமுக அம்மா அணியுடன் வந்து சேர்ந்த ஓபிஎஸ்ஸுக்கு எதற்கு பதவி தர வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.

ஆதரவை இழந்துவிட்டார்.
ஆகையால், 19 எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும். வேறு முதல்வரை நியமிக்க வேண்டும். அதற்கு சட்டத்தில் எல்லா வழிவகையும் உள்ளது என்பதை ஆராய்ந்துதான் இந்த கோரிக்கை ஆளுநரிடம் முன்வைத்துள்ளோம். இப்போதும் எங்களுக்கு சசிகலா தான் பொதுசெயலாளர்.
இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications