போயும் போய் அவரை பற்றியா? விசாரிக்கிறதுக்கு வேற ஆளா இல்லை.. டெல்லியிடம் எகிறிய தமிழக ஐபி அதிகாரிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் தினகரனின் அதிதீவிர விசுவாசியை பற்றி மத்திய உளவுத்துறை விசாரித்திருக்கிறது. ஆனால் தமிழக உளவுத்துறை அதிகாரிகளோ நீங்கள் விசாரிப்பதற்கு தகுதியான வேறு நபரே இல்லையா என கேட்டு கடுப்படித்துவிட்டதாக கூறுகின்றன கோட்டை வட்டாரங்கள்.

அண்மைக்காலமாக தினகரனுக்காக உயிரை கொடுக்கும் அளவுக்கு முழக்கமிட்டு வருகிறார் அந்த அதிதீவிர விசுவாசி. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கூட இவ்வளவு புகழாரம் சூட்டியதும் இல்லை.

வெளுத்து கட்டு...

வெளுத்து கட்டு...

அதேநேரத்தில் தத்துவார்த்த ரீதியாக பாஜகவை வெளு வெளுவென வெளுத்துக் கட்டியும் வருகிறார் அந்த விசுவாசி. அதிமுகவினரே முகம் சுளிக்கும் வகையிலான புகழ்ச்சிகளை கூச்சமே இல்லாமல் உதிர்த்து வருகிறார் அந்த நபர்.

விசாரித்த டெல்லி

விசாரித்த டெல்லி

இவர் குறித்த தகவல் டெல்லிக்குப் போயிருக்கிறது. உடனே மத்திய உளவுத்துறை அந்த அதிதீவிர விசுவாசி குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் முதலில் கேட்கப்பட்டிருக்கிறது.

நாலாந்தர பேச்சாளராம்..

நாலாந்தர பேச்சாளராம்..

தமிழக உளவுத்துறை அதிகாரிகளோ, போயும் போய் உங்களுக்கு விசாரிக்க அவருதான் கிடைச்சாரா? நாலாந்தர பேச்சாளர் அவர்... காசு கொடுத்தால் உங்களுக்கு ஆதரவாகவும் பேசுவார்... மெனக்கெட்டு அவரை பற்றி விசாரிக்கிறீர்களே என கடுப்படித்துள்ளனர்.

அங்கலாய்ப்பு

அங்கலாய்ப்பு

இத்தகவல் அப்படியே டெல்லிக்கு பாஸ் செய்யப்பட்டு வருகிறது. அடக்கொடுமையே... சவுண்டை பார்த்து ஒர்த்தே இல்லாத ஆளைப் பற்றி விசாரிச்சுட்டேமே... அசிங்கமாகிவிட்டதே என அங்கலாய்த்துக் கொள்கின்றனராம் டெல்லி அதிகாரிகள்!

அவரு மாதிரி துடைச்சுக்க வேண்டியதுதானோ!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Delhi sources said that Dinakaran's new loyalist now facing trobule.
Please Wait while comments are loading...