என்னது சிடி கேட்டாங்களா? திவாகரன் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சாடல்
ஜெயலலிதா சிகிச்சை சிடியை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டதாக திவாகரன் கூறுவது பொய் என்கிறார் புகழேந்தி.
சென்னை: வருமான வரி சோதனையின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிடி எங்கே என கேட்டதாக திவாகரன் கூறியிருப்பதற்கு தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ம்றுப்பு தெரிவித்துள்ளார்.
சசிகலா உறவினர்கள் மற்றும் கர்நாடகா மாநில அதிமுக (அம்மா) அணி செயலாளர் புகழேந்தி உட்பட 355 பேரிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்த வருமான வரி சோதனை.

இச்சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், வருமான வரி சோதனைகளால் எங்களை பணிய வைக்க முடியாது; எந்த ஒரு மிரட்டலுக்கும் நாங்கள் அடிபணியமாட்டோம். வருமான வரி சோதனை நடைபெற்ற பல இடங்களில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான சிடி இருக்கிறதா? என கேட்டிருக்கிறார்கள். என்னிடம் எதுவும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.
ஆனால் இதை வருமான வரி சோதனைக்குள்ளான பெங்களூரு புகழேந்தி கடுமையாக் மறுத்துள்ளார். வருமான வரித்துறை அதிகாரிகள் அப்படியான எந்த ஒரு கேள்வியுமே கேட்கவில்லை. பொய் கதைகளை புனைய வேண்டாம் என சாடியிருக்கிறார்.
ஏற்கனவே வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கதறியிருந்தார் தினகரன். ஆனால் வருமான வரி சோதனைக்குள்ளான விவேக், கிருஷ்ணப்பிரியா இருவருமே, அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்தனர்; இதில் அரசியல் பழிவாங்கல்; அரசியல் உள்நோக்கம் எதுவுமே இல்லை என நோஸ்கட் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications