இரட்டை இலை விவகாரம்: ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய தினகரன் மனு டிஸ்மிஸ்!
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரிய தினகரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Recommended Video

மதுரை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரி தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டுவர உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து செப்டம்பர் 29-க்குள் அனைத்து தரப்பும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனடிப்படையில் ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்தது. ஆனால் தினகரன் தரப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டது. இதை தேர்தல் ஆணையம் நிராகரித்ததுடன் அக்டோபர் 6-ந் தேதி முதல் விசாரணை தொடங்கும் என அறிவித்தது.
இந்நிலையில் தங்களுக்கு கூடுதல் அவகாசம் தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில் 4 மாத கால அவகாசத்தை தினகரன் தரப்பு கோரியிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், அப்துல் குத்தூஸ் பெஞ்ச் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது.
இன்று பிற்பகல் தீர்ப்பளித்த நீதிபதிகள், தினகரன் தரப்பு மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications