'பலே பாண்டியா'... திண்டுக்கல்லில் மெடிக்கல் லீவ் போட்டு கொள்ளையடித்த 'இன்ஸ்பெக்டர்' கைது
திண்டுக்கல்: நெடுஞ்சாலையில் கார்களை வழிமறித்து கொள்ளையடித்த திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியன் 1996-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் மீது பல புகார்கள் வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டார்.

இவர் அண்மையில் பழனி கீரனூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் கீரனூரில் சார்ஜ் எடுக்காமல் மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார் கோபிநாத் பாண்டியன். ஆனால் மெடிக்கல் லீவில் போவதாக கூறிவிட்டு தொடர் கொள்ளைகளில் கோபிநாத் பாண்டியன் ஈடுபட்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த சிகரெட் மொத்த டீலரான சிவபெருமாளிடம் கடந்த ஜனவரி மாதம் கொடைரோடு டோல்கேட் அருகே இன்ஸ்பெக்டர் என கூறி மர்ம ஆசாமி ஒருவர் ரூ1 லட்சத்தை பறித்துள்ளார். அதே சிவபெருமாள் கொண்டு சென்ற ரூ37 லட்சம் மதிப்பிலான சிகரெட் பண்டல்களை போலீசார் எனக் கூறி ஒரு கும்பல் கடந்த 12-ந் தேதி கடத்திச் சென்றது. அத்துடன் சிவபெருமாளிடம் இருந்த ரூ2 லட்சம் பணத்தையும் அக்கும்பல் பறித்துச் சென்றது.
இச்சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் தாடிக்கொம்பு மற்றும் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டோல்கேட் கொள்ளையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனின் கார் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் டோல்கேட் கொள்ளை, சிகரெட் பண்டல் கொள்ளை ஆகியவற்றில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனுக்கு நேரடியாக தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இன்ஸ்பெக்டர் கோபிநாத் பாண்டியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன கொடுமை!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications