தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.. இயக்குனர் பாரதிராஜா எச்சரிக்கை

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிரான முடிவெடுத்து தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பாரதிராஜா பேசியதாவது:

சட்டத்திட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்கிற அதே நேரத்தில் தார்மீகத்திற்கும் வழி விட வேண்டும். தமிழர்களின் உணர்வோடு பின்னிப்பிணைந்தது ஜல்லிக்கட்டு. காளைகளுடனான மக்களின் உறவை பிரிக்கும் முயற்சியே ஜல்லிக்கட்டு மீதான தடை. தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட வேண்டாம். இதன் மூலம் தேச ஒற்றுமைக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்று கூறினார்.

Director Bharathi Raja demanded to life ban on Jallikattu

சி. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பழ நெடுமாறன், நடிகர் சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகரான சென்னையில் மாணவர்கள், அரசியல் கட்சிகளின் போராட்டகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+