'ஒரே ஏமாற்றமா போச்சு'.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நேற்று பேசியது என்ன.. நடந்த எதிர்வினைகள் என்ன
மயிலாடுதுறை: "ஒரே ஏமாற்றமா போச்சு எனக்கு.. தீபம் ஏற்றக்கூடிய நாள் வரும்னு உறுதியாக நம்புகிறேன்" என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விழாவில் பேசியிருக்கிறார். ஒரு நீதிபயே நினைத்தாலும் அரசாங்கத்தின் முடிவை மாற்ற வைக்க முடியவில்லையே ஏன் தெரியுமா.. அதற்கான எதிர்வினை இந்தியாவில் எந்த நீதிபதியும் சரித்திரத்தில் சந்தித்து இல்லை.. மயிலாடுதுறை கம்பராமயணம் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் பேசியது என்ன என்பதை பார்ப்போம்.
மதுரை திருபரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த மலையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தர்காவும் உள்ளது. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனது உத்தரவில், கோவில் சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் கருதியே தீபம் ஏற்ற உத்தரவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கோவில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உத்தரவுக்கு நீதிபதியின் உத்தரவை ஏற்கவில்லை..

144 தடை உத்தரவு
இதனால் உடனே மேல் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று மத்திய பாதுகாப்புபடை வீரர்களை உதவிக்கு அனுப்பி உத்தரவிட்டார். ஆனால் அரசு எதிர்வினையாக 144 தடை உத்தரவு போட்டது. அரசு நீதிமன்றம் இடையே திருப்பரங்குன்றம் விவகாரம் உணர்வுப்பூர்வமான சர்ச்சையானது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த மறுத்ததுடன், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து அவரது உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த விவாகரத்தில் என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்கிற எண்ணத்தில் தமிழக அரசு ஒவ்வொரு நகர்வையும் செய்து வருகிறது.
தமிழக அரசு முடிவு என்ன
இது ஒருபுறம் எனில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, கோவில் சடங்குகளில் நீதிமன்ற தலையீட்டை அனுமதிக்காத 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு அமர்வின் தீர்ப்பை மீறுவதாகவும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்குள் நீதிபதியின் முடிவு சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆளும் கட்சியான திமுக வாதிட்டு வருகிறது. மறுபுறம் நீதிபதி பிறப்பித்த உத்தரவையடுத்து, தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று ஏராளமான இந்து அமைப்பினர் மலையேற முயன்றதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. எனினும் என்னதான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் தமிழக அரசு உத்தரவை நிறைவேற்ற முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.
பாஜக எதிர்பார்க்காதது
அதேநேரம் இந்த தீர்ப்பை பிறப்பித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு அதற்கான எதிர்வினை என்பது இந்தியாவில் எந்த நீதிபதியும் சரித்திரத்தில் சந்தித்து இல்லை. அவருக்கு எதிராக நாடாளுன்றத்தில் குற்றவியல் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளும் திமுக முன்னெடுத்தது. ஆளும் பாஜக மற்றும் மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என எந்த அமைப்புகளும் எதிர்பார்க்காத ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
அமித்ஷா தாக்கு
அதிலும் 107 எம்பிக்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக கையெழுத்து போட்டு, சபாநாயகரிடம் அளித்தன. இதனை ஏற்பதும், நிராகரிப்பதும் சபாநாயகரின் உரிமை என்றாலும், இப்படியான அழுத்தம் வரும் என்பதை மத்திய அரசு நிச்சயம் எதிர்பார்த்திருக்காது. நாடாளுமன்றத்திலேயே அமித்ஷா இதற்காக திமுகவை அப்போது கடுமையாக சாடினார். ஒரு நீதிபதி தீர்ப்பளித்தற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டதும், இந்தியாவில் இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது. எனினும் இதற்கு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் எந்த பதிலும் அளித்தது இல்லை..
சமய அடையாளங்கள்
அந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசுகையில், "இங்கு இரு சட்டக்கல்லூரி மாணவிகள் என்னிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டார்கள். அவர்களை பார்த்தபோது நெற்றி நிறைய விபூதி இருந்தது. நமது சமய அடையாளங்களை இட்டுக்கொள்வதற்கு கூச்சமே படக்கூடாது. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
ஏமாற்றம்
இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது குத்துவிளக்கு ஏற்றப்படும் என அறிவித்தார்கள். அனால், தீபம் ஏற்ற ஆனந்தமாக சென்றேன். ஆனால், ஐயா விளக்கை நீங்கள் ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். (பெண்கள் குத்துவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், அதை வைத்து நகைச்சுவையாக கூறியிருந்தார்). அதனால் ரொம்ப ஏமாற்றமாக போய்விட்டது. எனக்கும் தீபத்துக்கும் என்ன பொருத்தம் என்று தெரியவில்லை. பரவாயில்லை, தீபம் ஏற்றும் நாள் வரும் என உறுதியாக நம்புகிறேன்" என்று சிரித்துக் கொண்டே ஜிஆர் சுவாமிநாதன் கூறினார்.
அதேபோல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் என்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று பேசினார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications