சொத்து குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. சசிகலாவின் முதல்வர் கனவு என்னாகும்?
சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதால் சசிகலாவின் முதல்வர் கனவு சற்றே ஆட்டம் கண்டுள்ளது.
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு நனவாகுமா அல்லது ஆட்டம் காணுமா என்ற பரபரப்பு கூடியுள்ளது.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இறுதி விசாரணையை முடித்த நீதிபதி குன்ஹா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அப்போது தந்தார். அந்த தீர்ப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் தள்ளப்பட்டனர். ஆனால், இந்த நால்வரும் வழக்கை மேல்முறையீடு செய்தனர். அதில் கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து முடித்துவிட்டது. ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்தி வைத்துள்ளது.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். தற்போது இன்று தீர்ப்பு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சசிகலாவின் முதல்வர் கனவு பலிக்குமா அல்லது நிராசையாகுமா என்ற
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த வழக்கில் இரு மாதிரியான தீர்ப்புகளை இரு நீதிபதிகளும் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications