தீபாவளிக்காக தமிழகம் முழுவதும் 8,350 சிறப்பு பஸ்கள் இயக்க ஜெயலலிதா உத்தரவு

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் பஸ்கள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். ரயில் பயணத்திற்கான முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் மக்கள் பஸ்களை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில் சிறப்பு பஸ்கள் இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவிற்கிணங்க, அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து 29.10.2013 அன்று 700 சிறப்பு பஸ்கள், 30.10.2013 அன்று 1,000 சிறப்பு பஸ்கள், 31.10.2013 அன்று 1,200 சிறப்பு பஸ்கள், 1.11.2013 அன்று 1,400 சிறப்பு பஸ்கள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 4,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து 29.10.2013 அன்று 634 சிறப்பு பஸ்கள், 30.10.2013 அன்று 950 சிறப்பு பஸ்கள், 31.10.2013 அன்று 1,256 சிறப்பு பஸ்கள், 1.11.2013 அன்று 1,210 சிறப்பு பஸ்கள் என 29.10.2013 முதல் 1.11.2013 வரை 4,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 29.10.2013 முதல் 1.11.2013 வரை மொத்தம் 8,350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதே போன்று, தீபாவளி பண்டிகை முடிந்தபின்பு, பொதுமக்கள் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் வகையில், இதே அளவிலான பஸ்கள் நவம்பர் 2.11.2013 முதல் 5.11.2013 வரை இயக்கப்படும்.
300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலம், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கணினி மூலம் உடனடி தள முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும், சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இது தவிர, தீபாவளி பண்டிகையையொட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் குறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழக அலுவலக தொலைபேசி எண்: 24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க எடுக்கப்பட்டுள்ள மேற்காணும் நடவடிக்கைகள், தமிழக மக்கள் தீபாவளி திருநாளை முன்னிட்டு எந்தவித சிரமமும் இன்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவர வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications