தங்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை தேடி தர வேண்டும்... பிவி சிந்துக்கு விஜயகாந்த் வாழ்த்து!
சென்னை: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நோசோமி ஓகுஹராவும் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய பிவி சிந்து, ஜப்பான் வீராங்னையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகிவிட்டது.

ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 58 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத் நிலையில், பிவி சிந்து அடுத்த பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் பிவி சிந்துவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற பிவி சிந்து அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கப்பதக்கம் வென்று நம் தாய்நாட்டிற்கு பெருமை தேடி தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருக்கும் பி.வி.சிந்து தங்களுடைய சென்னை ஸ்மாஷர்ஸ் டீமில் விளையாடியவர் என்று பெருமிதம் கொள்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications