யாருடன் கூட்டணி? பெரம்பலூரில் ஜன.9-ல் கூடுகிறது தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு!!
சென்னை: சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. எந்த அணிக்கு போகும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் பெரம்பலூரில் ஜனவரி 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேமுதிக தங்கள் அணிக்கு வர வேண்டும் என்று தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தோ செயற்குழு, பொதுக்குழு மற்றும் கட்சி மாநாடு ஆகியவற்றை கூட்டி ஆலோசித்து பின்னர் அறிவிப்போம் என கூறி வருகிறார்.
தேமுதிக தலைமை செயற்குழு மற்றும்பொதுக்குழு கூட்டம் தலைமைக் கழகம் அறிவிப்பு pic.twitter.com/1DnJYBK9jl
— DMDKParty (@dmdkparty2005) December 30, 2015 இந்த நிலையில் தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு ஜனவரி 9-ந் தேதி பெரம்பலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 09.01.2016 சனிக்கிழமை காலை 9 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள J.K மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதில் தேமுதிக கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப் படவுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தேமுதிக தலைமை நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications