தேமுதிக ஆபீசில் நாளை 'யோகா தினம்'.. விஜயகாந்த் பங்கேற்று யோகாசனம் செய்கிறார்?
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நாளை காலை யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதில் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூன் 21ம் நாளை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது நமது நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். அதை கொண்டாடும் வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
— DMDKParty (@dmdkparty2005) June 20, 2015 இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதில் டாப் என்னவென்றால், விஜயகாந்த் யோகா செய்வது போன்ற ஒரு படம் அக்கட்சி ஆதரவு, டிவிட்டர் தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை ஆடையில் அமர்க்களமாக, யூத்புல்லாக தெரிகிறார் விஜயகாந்த். அநேகமாக ரமணா திரைப்பட காட்சி அதுவாக இருக்கும் என்று தெரிகிறது. இதை வைத்து பார்த்தால், விஜயகாந்த்தும் நாளை யோகாசன பொசிசன்களை செய்து காட்டி தொண்டர்களை மகிழ்விப்பார் என்று தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications