தேமுதிக கொடியை உடலில் வரைந்து விஜயகாந்த் வீடு அருகே ரவுண்டடித்த தொண்டர் கைது
சென்னை: தேமுதிக கொடியை உடலில் வரைந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு அருகே மர்மமான முறையில் சுற்றிக் கொண்டிருந்த 35 வயது நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் சென்னை பெருங்குடியைச் சேர்ந்தவர். இவரது உடலில் தேமுதிக கொடி வரையப்பட்டிருந்தது. இவர் நேற்று விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டுப் பக்கம் மர்மமான முறையில் சுற்றிக் கொண்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து யாருப்பா நீ என்று அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், அவர் தன்னை தேமுதிக அனுதாபி என்று கூறியு்ள்ளார். பெருங்குடியில் உள்ள அவரது வீட்டை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி எனக் கூறி அதிகாரிகள் இடித்துள்ளனராம். இதனால், இந்த தகவலை விஜயகாந்திடம் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைப்பதற்காக ரமேஷ் விருகம்பாக்கத்துக்கு வந்திருந்தாராம்.
சரி உடலில் எதற்குக் கொடி என்று கேட்டபோது, விஜயகாந்த் கவனத்தை ஈர்க்கத்தான் என்று கூறினாராம். இதையடுத்து மர்மமான முறையில் சுற்றியதற்காக அவரைப் போலீஸார் கைது செய்து வழக்கையும் போட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications