ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளராக திருச்சி என்.சிவா- கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து 6 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில், தி.மு.க. சார்பில் திருச்சி என்.சிவா நிறுத்தப்படுகிறார் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 ராஜ்யசபா எம்.பி.க்களில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரெங்கராஜன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பாலகங்கா, தி.மு.க.வைச் சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரின் பதவி காலம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதியோடு முடிவடைகிறது.
இதனால் புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம் மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது.

திமுக வேட்பாளர் திருச்சி சிவா
இத்தேர்தலில் திமுக வேட்பாளராக திருச்சி சிவா நிறுத்தப்படுவார் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். அவர் ராஜ்யசபா எம்.பியாக பதவி வகித்தார். அவரது பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1 எம்.பிக்கு 34 எம்.எல்.ஏ.க்கள்...
பொதுவாக ஒரு ராஜ்யசபா எம்.பியை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அவசிய,

அதிமுக அணி 5 எம்.பிக்கள்
சட்டசபையில் அதிமுக அணியின் பலத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற எந்தவொரு கட்சியும் சொந்த பலத்தைக்கொண்டு ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க முடியாது.

திமுக நிலை
23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள தி.மு.க. தனித்து நின்றால் வெற்றிபெற முடியாது என்ற நிலையிலும் அக்கட்சி சார்பில் திருச்சி என்.சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

எந்தெந்த கட்சி ஆதரவு?
திருச்சி சிவா தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக அறிவித்திருக்கும் நிலையில் சிவா எந்தெந்த கட்சிகளின் ஆதரவோடு தேர்வு செய்யப்படுவார்? என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications