காவேரி மருத்துவமனை முன் மீண்டும் கூடும் திமுக தொண்டர்கள்.. பாதுகாப்பு அதிகரிப்பு
திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

இன்று காலை அவருக்கு உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனை உடனடியாக சரியானது. அவருக்கு 10வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கருணாநிதி தற்போது மீண்டும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஸ்டாலின், தயாளு அம்மாள் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன் மீண்டும் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மீண்டும் அங்கே கூடி வருகிறார்கள். இதனால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக தொண்டர்கள் கூட்டம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் அங்கே மக்கள் வருகிறார்கள். கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு என்ற தகவலால் கூட்டம் அதிகமாகி உள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications