"தளபதி" பேசுகிறார்.. "தலைவர்" கேட்கிறார்.. உற்சாகத்தின் உச்சிக்கே போன திமுக தொண்டர்கள்!
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 2வது புகைப்படம் திமுகவினரிடையே மிகப் பெரும் உற்சாகத்தையும், மிகப் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சேர்க்கப்பட்டது முதலே திமுகவினர் பெரும் சோகத்துடன் வலம் வருகின்றனர். ஆனால் நம்பிக்கை போகவில்லை. தொண்டர்களின தலைவரான கருணாநிதியும் விடுவதாக இல்லை. செமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
ஆனால் அதைத் தொடர்ந்து திடீரென ஏற்பட்ட சில நிகழ்வுகளால் தொண்டர்கள் பெரும் சோகமடைந்தனர். ஆனால் தற்போது 2வது புகைப்படம் வெளியாகி அவர்களின் அத்தனை சோகத்தையும் துடைத்துப் போட்டுள்ளது.
ராகுல் காந்தி இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்தபோது எடுத்த புகைப்படம் இது. கருணாநிதியின் காதுக்கு அருகே சென்று ராகுல் வருகை குறித்து ஸ்டாலின் சொல்வது போல உள்ளது.
இந்தப் புகைப்படத்தில் கருணாநிதியின் முகம் மிகத் தெளிவாக காணப்படுகிறது. சுகவீனத்தின் தாக்கம் முகத்தில் தெரிந்தாலும் அந்தக் கண்கள் சொல்லும் கதை திமுகவினரை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. தளபதி பேசுகிறார், அதை தலைவர் உன்னிப்பா கேட்கிறார். இது போதும் எங்களுக்கு என்று காவேரி மருத்துவமனைக்கு வெளியே கூடியுள்ள திமுகவினர் கூறி குதுகலித்து வருகின்றனர்.
Wow 😍, yes this s a miracle!! #karunanidhi pic.twitter.com/UP8gS66c1B
— Hari Prabhakaran (@HariIndic) July 31, 2018
சமூக வலைதளங்களிலும் கருணாநிதியின் இந்த புகைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னல் வேகத்தி்ல இந்தப் படம் ஷேர் ஆகி வருகிறது. பேஸ்புக், டிவிட்டர் என எல்லா தளங்களிலும் பலரும் ஆர்வத்துடன் இதை ஷேர் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.படம் வெளியாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications