அழகிரியிடம் திட்டு வாங்கியவர்தான் நெல்லை வேட்பாளர்களிலேயே துட்டுக்காரராம்!
திருநெல்வேலி : நெல்லை தொகுதியில் போட்டியிடும் வேடபாளர்களிலேயே திமுகவின் தேவதாச சுந்தரம்தான் பெரிய பணக்காரர்.
அவர்தான் மிகப் பெரிய கோடீஸ்வர வேட்பாளரும் கூட. மற்றவர்களெல்லாம் இவருக்குப் பின்னால்தான்.
இவரை பலருக்கும் யார் என்றே தெரியாது. இருந்தாலும் மிகப் பெரிய பணக்காரரான இவர் வேட்பாளராகி விட்டார்.

யார் இந்த தேவதாச சுந்தரம்
இந்தக் கேள்வியைக் கேட்டது வேறு யாருமல்ல மு.க.அழகிரிதான். மதுரையில் செய்தியாளார்களிடம் அவர் பேசுகையில் இப்படிக் கேட்டார்.

இவருக்கெல்லாம் 3வது இடம்தான்
அத்தோடு நில்லாமல், இவருக்கெல்லாம் 3வது இடம்தான் கிடைக்கும். காசு கொடுத்து டிக்கெட வாங்கி விட்டார் என்றும் திட்டித் தள்ளியிருந்தார்.

ஆனால் பெரும் சொத்துக்காரர்
ஆனால் நெல்லை வேட்பாளர்களிலேயே பெரும் பணக்காரர் இந்த தேவதாச சுந்தரம்தான். அதாவது இவரது சொத்து மதிப்பு ரூ. 18.6 கோடியாகும்.

வயசு 73 ஆச்சு
சுந்தரத்துக்கு வயது 73 ஆகிறது. அரசுத்துறையில் கட்டுமானப் பிரிவில் பொறியாளராக இருந்தவர்.

அசைவது மட்டும் ரூ. 3.14 கோடி
அசையும் சொத்துக்களாக 3 கோடியே 14 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்களாக நிலபுலன், கட்டடம் 15 கோடியே 55 லட்சம் மதிப்பில் இருப்பதாகவும் மொத்தம் 18 கோடியே 69 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளார்.

ஒரு வரி பாக்கியும் கிடையாது
அரசுக்கு எந்த வரிபாக்கியும் இல்லை எனவும் இவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வருமான வரி தாக்கலின்போது ஆண்டுவருமானமாக 69 லட்சத்து 50 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் ரொம்ப தூரத்தில்
மற்ற வேட்பாளர்கள் எல்லாம் இவருக்குப் பின்னால் ரொம்ப தூரத்தில் உள்ளனர் - சொத்து விஷயத்தில்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications