செயல்வீரர் கூட்டத்தையே மாநாடு போல நடத்திய திமுக வேட்பாளர்.. மிரண்டு போன பெருந்தலைகள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளரை மாற்றியது முதல் அந்தத் தொகுதியே பெரும் உற்சாகமாக காணப்படுகிறது. புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சிவ. வீ. மெய்யநாதன் போகும் இடமெல்லாம் பெரும் கூட்டம் கூடி வருவதை அந்தக் கட்சியினரே ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனராம்.
ஆலங்குடி தொகுதிக்கு முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் டாக்டர் சதீஷ். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு வார காலம் தொகுதியில் போராட்டம் நடந்தது. இதையடுத்து பணிந்து வந்த திமுக மேலிடம், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான சிவ. வீ. மெய்யநாதனை வேட்பாளராக அறிவித்தது.

மறமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவரான மெய்யநாதன் எம்.சி.ஏ. படித்தவர். தொகுதியில் நல்ல செல்வாக்குடன் உள்ளவர். அனைத்துத் தரப்பினரின் அன்பையும் பெற்றவராம். இதனால் அவருக்கு ஆதரவாக இப்போது பெரும் கூட்டமே ஓட்டு வேட்டையாடி வருகிறது.
போகும் இடமெல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு களை கட்டுகிறதாம். இந்த நிலையில் அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவணத்தான் கோட்டை கிராமத்தில் நேற்று செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பெரிய மாநாட்டுக்கு வருவது போல ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்தனர்.

இதைப் பார்த்து திமுகவினரே திணறிப் போய் விட்டனர், ஆச்சரியமடைந்தனர். கட்சி சீனியர்களும் கூட இவ்வளவு பெரிய கூட்டத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று பேசிக் கொண்டனர்.
வெற்றியும் இதே அளவுக்கு பிரமாண்டமாக இருக்குமா...?
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications