3 மாவட்டச் செயலாளர்களை நீக்கியது திமுக.. ஏ.கே.எஸ். விஜயனும் விடுவிப்பு!
சென்னை: நாகப்பட்டனம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து ஏ.கே.எஸ். விஜயன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய செயலாளராக கெளதமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல நாகை வடக்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர்களையும் நீக்கியுள்ளது திமுக. நாகை தெற்கு மாவட்ட செயலாளராக திமுக முக்கியத் தலைவரான விஜயன் இருந்து வந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் கட்சியில் களையெடுக்கும் வேலையை திமுக செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜயன் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிவிப்பில், நாகை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் விடுவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு என். கெளதமன் நியமிக்கப்படுகிறார்.

நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் பி. கல்யாணம் விடுவிக்கப்பட்டு அவரது இடத்தில் நிவேதா எம். முருகன் நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ராஜாங்கம் விடுவிக்கப்பட்டு பொறுப்பாளராக கழுகுமலை ஏ. சுப்ரமணியன் நியமிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
கட்சிப் பணிகள் சரிவர நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் புதிய நிர்வாகிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications