காவிரி: தேவகவுடாவின் திடீர் காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு திமுக, காங். கடும் கண்டனம்!
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதற்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தமிழகத்துக்கு இன்று முதல் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடிநீரை திறந்துவிட்டே ஆக வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையுடன் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடகா அரசோ வழக்கம் போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க கூடாது என்பதை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தேவகவுடா அறிவித்துள்ளார்.
தேவகவுடாவின் இந்த போராட்டத்துக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச்செயலர் விபி துரைசாமி, தேவகவுடாவின் உண்ணாவிரதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் சாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் கண்டனம்
இதேபோல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் தேவகவுடாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேவகவுடாவின் உண்ணாவிரதம் சட்டவிரோதமானது; பிரதமராக இருந்தவர் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது என்பது ஜனநாயக விரோதமானது என சாடினார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications