செயற்குழுவை வெற்றிகரமாக நடத்தி காட்டிய ஸ்டாலின்.. கலக்கத்தில் அழகிரி
திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். இது அழகிரி தரப்பிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் நடந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடந்துள்ளது.
முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பறந்த தகவல்
நான்கு நாட்களுக்கு முன் இப்படி கூட்டம் நடக்க போகிறது என்று அறிவிப்பு வந்த போதே இதுகுறித்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதேபோல் கண்டிப்பாக எல்லா நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் தீர்க்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மிக முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது என்றும் தகவல் பறந்தது.

பெரிய ஏற்பாடு
அதற்கு ஏற்றபடி தற்போது அண்ணா அறிவாலயத்தில் பெரிய ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை, திமுக நடத்திய செயற்குழு கூட்டத்தில் மிக முக்கியமான கூட்டமாக இது பார்க்கப்படுகிறது. உட்பக்கம் மட்டுமில்லாமல் வெளியேவும் பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பீக்கர், பேனர் கட்டப்பட்டு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

அழகிரி குறித்து
இந்த கூட்டத்தில் அழகிரி குறித்து சில தலைவர்கள் மட்டும் பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவரை குறித்து பிரச்சனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரை குறித்து க.அன்பழகன் தவிர வேறு யாரும் பேசவில்லை. ஆம், இந்த கூட்டத்தில் அழகிரி பிரச்சனையை பெரிய அளவில் திமுக நிர்வாகிகள் பொருட்படுத்தவில்லை.

அழகிரி கலக்கம்
அழகிரி பிரச்சனையை அமைதிப்படுத்தும் வகையில் ஸ்டாலின் இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளார். இது அழகிரி தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் சிலராவது தனக்கு உதவுவார்கள், தன்னை பற்றி நேர்மறையாக கூட்டத்தில் பேசுவார்கள் என்று நினைத்தவருக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications