மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு....தமிழக அரசுக்கு திமுக பொதுக்குழு கண்டனம்
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சென்னையில் கூட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அதிமுக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 23 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் யார் யார் கூட்டு சேரப் போகிறார்கள் என்ற கேள்விதான் மக்கள் முன்பு இப்போது அதிகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் பலமாக உள்ளது.
குறிப்பாக பாஜக, தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த பின்னணியில் இன்று சென்னையில் திமுக தனது பொதுக்குழுவைக் கூட்டியது.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய பின்னர் 9 மாதம் கழித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. எனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் பொதுக்குழுக் கூட்டத்தில் 23 முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
அவற்றில் முக்கியமான சில...
- இலங்கை படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தவேண்டும்.
- சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைக்கும் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய,மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணாத அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications