வாம்மா.. நான் வர்றேன்! பேங்க்கில் இருந்தே கலெக்டருக்கு போன்.. கல்விக்கடனை உறுதி செய்த திமுக எம்எல்ஏ!
கள்ளக்குறிச்சி : நர்சிங் படிக்கும் ஏழை மாணவி, கல்லூரி கட்டணம் கட்ட முடியாமலும், வங்கிக் கடன் கிடைக்காமலும் சிரமப்பட்ட தகவல் அறிந்து, மாணவியுடன் வங்கிக் கிளைக்கே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து அழுத்தம் கொடுத்து, வங்கிக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்.
ஓராண்டுக்கும் மேலாக வங்கிக் கடன் கேட்டு அலைந்தும், கிடைக்காததால் நம்பிக்கை இழந்து சோர்ந்து போயிருந்த மாணவிக்கு வெளிச்சம் கொடுத்திருக்கிறார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன்.
பெரும் கனவுகளோடு நர்சிங் படிக்க ஆரம்பித்த மாணவி, கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்பட்ட நிலையில், திமுக எம்.எல்.ஏ தானே முன்னின்று வங்கிக் கடன் பெற்றுத் தந்துள்ளது அப்பகுதியினரிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

திமுக தீவிரம்
தமிழ்நாட்டை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக இரு கட்சிகளும் தற்போது தங்கள் கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளன. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இரண்டு மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திமுகவினர் களத்தில் இறங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக எம்.எல்.ஏ
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏவுமான வசந்தம் கார்த்திகேயன், திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வசந்தம் கார்த்திகேயன் சென்றபோது, திமுக பிரமுகர் ஒருவர், ஒரு கல்லூரி மாணவியை அழைத்து வந்து, இந்த மாணவை பி.எஸ்.சி நர்சிங் படிக்கிறார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்குப் போகவில்லை. கல்விக் கடன் கிடைக்காமல் அல்லாடி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி சுஷ்மிதாவை அழைத்து விவரங்களைக் கேட்டறிந்துள்ளார் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்.

நேரடியாக வங்கிக்கே சென்று
இதையடுத்து, கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் சேர்க்கை பணிகளை கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அந்த மாணவியை அழைத்துக்கொண்டு, அந்த மாணவி வங்கிக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த வாணாபுரம் இந்தியன் வங்கி கிளைக்குச் சென்றுள்ளார். வங்கி மேலாளரிடம், இந்த மாணவிக்கு லோன் கொடுக்காததற்கு என்ன காரணம் என விசாரித்துள்ளார். அதற்கு வங்கி மேலாளர், இந்த மாணவிக்கு நான்கரை லட்சம் ரூபாய் கடன் தேவைப்படுகிறது. அவ்வளவு தொகையை திருப்பிக் கட்டும் அளவுக்கு குடும்ப நிலவரம் இல்லை என்று கூறியுள்ளார். இந்த மாணவி படித்தால் அவரது குடும்பம் முன்னேறிவிடும், லோன் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன்.

கலெக்டருக்கு போன்
ஆனாலும், மேனேஜர் பிடிகொடுக்காத நிலையில், உடனே அங்கிருந்தபடியே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு போனில் அழைத்து இந்த விஷயத்தைச் சொல்லி, வறுமையில் வாடும் குடும்பம், இந்த மாணவி படிக்க வைக்க வேண்டும், எப்படியாவது லோனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜடாவத், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். மண்டல மேலாளர் உடனடியாக வாணாபுரம் இந்தியன் வங்கி மேனேஜரை தொடர்பு கொண்டு அந்த மாணவிக்கு லோன் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, லோன் தருவதாக அந்த மாணவியின் முன்பாகவே எம்.எல்.ஏவிடம் தெரிவித்துள்ளார் வங்கியின் மேனேஜர்.

நெகிழவைத்த வசந்தம் கார்த்திகேயன்
வங்கிக் கடன் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, முதல் தவணை பணம் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்படும் என்ற தகவல் அறிந்து அந்த மாணவி சுஷ்மிதா மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக லோன் கேட்டு அலைந்து வந்த மாணவி சுஷ்மிதாவும், அவரது தாயாரும், லோன் கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் உருக்கமாக நன்றி தெரிவித்தனர். அதோடு, அந்த மாணவி படிக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு கொண்டு, மாணவியின் குடும்பச் சூழலை கருத்தில்கொண்டு கட்டணத்தை குறைத்துக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன். எம்.எல்.ஏவின் இந்தச் செயல்ப் அப்பகுதியினர் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு












Click it and Unblock the Notifications