For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏக்கள் 20 பேர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... தொடரும் பரபரப்பு

திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் சபைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்படுவதைக் கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டசபைக்குள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, நந்தகுமார் ஆகியோர் உள்ளேவிட அனுமதிக்கோரி போரட்டம் நடத்தி வருகின்றனர்.

DMk MLAs evicted from the assembly

சட்டசபையில் கடும் ரகளையில் ஈடுபட்டதால் திமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீண்டும் சபைக்குள் அனுமதிக்கக்கோரி வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

DMk MLAs evicted from the assembly

இதற்கு காவல்துறையினர் மறுத்ததால் சபைக்கு செல்லும் பாதையில் அமர்ந்து எம்எல்ஏக்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், நந்தகுமார் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், உத்திரமேரூர் சுந்தர் ஆகியோரும் சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

DMk MLAs evicted from the assembly

தளி தொகுதி எம்எல்ஏவான பிரகாஷும் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். திமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக சபையில் இருந்து வெளியேற்றப்படுவதால் அங்கு பரபரப்பு நீடித்து வருகிறது

திமுக எம்எல்ஏக்கள் 20 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சபைக்குள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
DMK MLAs M.Subramaniyan, Sekar babu, Nandhakumar are evicted from the assembly. they are sitting and protesting in the enterance of the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X