ஐ.பி.எஸ் அதிகாரிகளை சட்டசபைக்குள் வர வைத்தாரா சபாநாயகர்? சர்ச்சையாகும் உத்தரவு
சட்டசபைக்குள் காக்கி சீருடையுடன் போலீசார் நுழைய அனுமதி கிடையாது. குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள்தான் வேண்டும் என்று வரவழைக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை.
சென்னை: உயர் போலீஸ் அதிகாரிகளை சட்டசபைக்குள் வரவழைத்து திமுக எம்.எல்.ஏக்களை வெளியே அகற்ற, சபாநாயகர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கொண்டு வந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின்போது சட்டசபையில் பெரும் அமளி வெடித்தது.
சபாநாயகர் மைக்கை திமுக எம்.எல்.ஏக்கள் உடைத்ததோடு, அவரையும் பிடித்து இழுத்தனர். சபாநாயகர் இருக்கையிலும் சில திமுக உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டனர்.

சட்டை கிழிப்பு
இதையடுத்து அவை 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. எனவே 3 மணிவரை அவையை ஒத்தி வைத்தார், சபாநாயகர். அப்போது அவையை விட்டு வெளியே போகாமல், உள்ளேயே அமர்ந்து தர்ணா செய்தனர் திமுக எம்.எல்.ஏக்கள். இதையடுத்து குண்டுகட்டாக அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த களேபரத்தில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதை
போலீசார் பூட்ஸ் காலால் தன்னை எட்டி உதைத்ததாக ஸ்டாலின் புகார் தெரிவித்தார். இப்படி போலீசார் அளவுமீறி கெடுபிடி காட்டியதற்கு காரணம், அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதுதான் என்பது அம்பலமாகியுள்ளது. மதியம் 2வது முறையாக சபை ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில் உயர் போலீஸ் அதிகாரிகளை சட்டசபைக்குள் வருமாறு சபாநாயகர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

கமிஷனருக்கு கோரிக்கை
சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் சென்னை போலீஸ் கமிஷனருக்கு இதுகுறித்த ஒரு கோரிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ள தகவல் சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. அக்கடிதத்தில், கூடுதல் போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர், மேற்கு-இணை கமிஷனர் சந்தோஷ் குமார், வடக்கு-இணை கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார், அம்பத்தூர் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்கள் ரவி, கோவிந்தராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியரின் பெயரை குறிப்பிட்டு அவர்களை சட்டசபைக்குள் நுழைந்து அவை காவலர்கள் போல வெள்ளை ஆடையுடன் திமுக உறுப்பினர்களை அகற்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.

புரியாத புதிர்
சட்டசபைக்குள் காக்கி சீருடையுடன் போலீசார் நுழைய அனுமதி கிடையாது. அதேநேரம், காவல்துறையை சேர்ந்தவர்கள்தான் வெள்ளை உடையுடன் அவைக்குள் பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் மார்ஷல்கள் என அழைக்கப்படுவர். எனவே மார்ஷல் உடையில் சட்டசபைக்குள் போலீசார் செல்வது மரபு. ஆனால் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகள்தான் வேண்டும் என்று குறிப்பிட்டு திமுக உறுப்பினர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளது ஏன் என்பது புரியவில்லை.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications