சட்டசபை மார்ஷல் சீருடையில் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்த சபாநாயகர்- ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் புகார்
போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர்கள் சீருடையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் வரவழைத்தது குறித்து ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர் சீருடையில் சபாநாயகர் உத்தரவின் பேரில் சட்டசபை செயலர் ஜமாலுதீன் வரவழைத்தது தொடர்பாக ஆளுநர் வித்யாசகர் ராவிடம் திமுக எம்.பிக்கள் இன்று புகார் தெரிவித்தனர்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் சபை நடவடிக்கைகள் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது சட்டசபைக்குள் தர்ணா போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
ஸ்டாலின் உள்ளிட்டோரை வெளியேற்றிய சபை காவலர்கள் பலரும் போலீஸ் அதிகாரிகள்; அவர்கள் சட்டசபை காவலர்கள் சீருடை அணிந்து திமுகவினரை வெளியேற்றினர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு ஆதாரமாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய கடிதம் ஒன்றும் வெளியானது.

இந்த நிலையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது போலீஸ் அதிகாரிகளை சட்டசபை காவலர்கள் சீருடையில் வரவழைத்தது பற்றி புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்தவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம்












Click it and Unblock the Notifications