கழகத்தின் போர்வாள், அக்கா கனிமொழி... திமுகவினரின் அதிரடி கோஷங்களை பாருங்கள்
சென்னை: 2ஜி வழக்கில் இருந்து விடுதலையடைந்த முன்னாள் மத்திய அமைச்சர், ஆ.ராசா மற்றும், திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் டெல்லியிலிருந்து இன்று சென்னை திரும்பினர்.
இதையடுத்து அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் திமுகவினர் பிரமாண்ட வரவேற்பு அளித்து வருகிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான மகளிர் அணியினரும், திமுக தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
கருணாநிதி, கனிமொழி, ஸ்டாலின் உருவ பதாகைகளை ஏந்தியபடி, அவர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

மேளம், மயிலாட்டம்
மேளம், நடனம், மயிலாட்டம், தாரை தப்பட்டை என விமான நிலையத்தை களை கட்ட வைத்துள்ளனர் திமுகவினர். விமான நிலையம் மத்திய படை பாதுகாப்பின்கீழ் உள்ளது. அவர்களாலும் திமுகவினரை கட்டுப்படுத்த மிகுந்த சிரமமாக இருந்தது.

டெல்லியிலும் கொண்டாட்டம்
நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான அன்று டெல்லிக்கே திமுக தொண்டர்கள் சென்று கொண்டாட்டங்களை நடத்தினர். இனிப்புகளை கொடுத்தனர். இன்று விமான நிலையத்திலும் அதேபோன்ற எழுச்சி காணப்பட்டது. தொண்டர்களை சந்திக்க தற்காலிக விழா மேடையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

பலூன்கள்
2ஜி வழக்கு பற்றி திமுக தொண்டர்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் வழக்கு பற்றிய விவரங்கள் உள்ளன. கருப்பு, சிவப்பு வண்ணங்களில் பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

எழுச்சி கோஷங்கள்
விமான நிலையத்தில், திமுக தொண்டர்கள், அதிலும் மகளிர் அணி தொண்டர்கள் போடும் கோஷம் எழுச்சிமிக்கதாக உள்ளது. "நீதிவென்றது", "கழக போர்வாள் அக்கா கனிமொழி வாழ்க", "வென்றது வென்றது.. நீதி வென்றது", "இந்த படை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா", "டாக்டர் கலைஞர் வாழ்க', "தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க", "நீதி வென்ற கனிமொழி", "2ஜி வென்ற கனிமொழி", "வென்றது வென்றது நீதி வென்றது" என்பது போன்ற கோஷங்கள் விமான நிலையம் முழுக்க எதிரொலித்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications