சசிகலா மீது ரொம்ப ஆசை.. சாகறதுக்கு முன்னாடி கூட கன்னத்தில் அறைந்தேன்.. புருஷோத்தமன் ஷாக் வாக்குமூலம்
செங்கல்பட்டு: சசிகலா குளித்து கொண்டிருந்தாள், அதை திமுக பிரமுகர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார்.. இதற்கு அவரது சகோதரரும் உடந்தை.. 4 வருஷமாக சசிகலாவை மிரட்டி மிரட்டியே இந்த சகோதரர்கள் சீரழித்த நிலையில், கடைசியில் சசிகலா தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.. இந்நிலையில், "சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது.. சாகறதுக்கு முன்னாடிகூட, சசிகலாவை கன்னத்தில் அறைந்தேன்" என்று 2 குற்றவாளிகளில் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு சம்பவம் தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது.. செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஃபேக்டரியில் வேலை பார்த்து வந்தார்.

இப்போது கம்பெனி மூடப்பட்டுள்ளதால், வீட்டில்தான் இருந்தார்.. இந்நிலையில், கடந்த 24-ந்தேதி சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. செய்யூர் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அருண்பாபு செய்யூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.
அத்துடன், தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்தான் இந்த சாவுக்கு காரணம், சசிகலா சடலத்தை தோண்டி இன்னொரு முறை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சுடுகாட்டிலேயே உட்கார்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போதுதான் இந்த விவகாரம் வெடித்து கிளம்ப தொடங்கியது.
புகாருக்கு உள்ளானவர்கள் திமுக இளைஞரணி செயலாளர் தேவேந்திரனும், அவரது சகோதரர் புருஷோத்தமன் என்பவரும்.. இவர்கள் சசிகலாவை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.. சசிகலா குளிக்கும்போது அதை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டி வந்துள்ளனர்.. 4 வருடமாக இந்த நரக வேதனையில் சசிகலா தவித்து வந்துள்ளார். வீட்டில் தனக்கு நடக்க இருக்கும் கல்யாணத்தையும் அண்ணன்-தம்பி தடுத்து வந்துள்ளனர்.. இதனால் மனமுடைந்த சசிகலா தூக்கு போட்டு தொங்கியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், சசிகலாவின் மரணம் தொடர்பாக புருஷோத்தமன் போலீசில் சரணடைந்துள்ளார். ஆனால், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அவரது சகோதரரும், திமுக இளைஞரணி செயலாளருமான தேவேந்திரனை காணோம்.. "சசிகலா மீது எனக்கு ஆசை இருந்தது.. சாகறதுக்கு முன்னாடிகூட, சசிகலாவை கன்னத்தில் அறைந்தேன்" என்று 2 குற்றவாளிகளில் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications