கருப்பசாமி பாண்டியன் மீது வழக்கு... ஸ்டாலின் நிகழ்ச்சிகள் ரத்து
தென்காசி: நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கு காரணமாக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட திமுக நிகழ்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தென்காசியில் வரும் 30ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி நேரடி கலந்தாய்வு மற்றும் கடையநல்லூர் பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட இளைஞரணி சார்பில் குற்றாலத்தில் வரும் 30ம் தேதி காலையில் கட்சியின் இளைஞரணி செயல்பாடு குறித்தும், இளைஞரணியின் பணிகள் குறித்தும் அமைப்பாளர்களுடன் நேரடி கலந்தாய்வு மேற்கொள்ள கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் வரும் 30ம் தேதி வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அன்று இரவு கடையநல்லூரில் திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக திமுக வட்டாரம் தரப்பில்கூறப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்ற தகவல்களை திமுக முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில், கட்சித் தலைமை நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளது. இந்நிலையில் அவர்மீது வழக்கு போடப்பட்டுள்ளதால் அவர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையுள்ளதால் இந்த நிகழ்ச்சிகள் மற்றொரு நாளில் நடக்கும் என்றனர்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications