"நோ நோ சொல்லுதே நோக்கியா" "போறேன்னு சொல்லுதே போர்டு கம்பெனி": அசத்திய தி.மு.க. முழக்கங்கள்!!
சென்னை: நில ஆர்ஜித மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசு, ஆதரித்த மாநில அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க.வுக்கே உரித்தான சுவாரசியமான அடுக்கு மொழி வசனங்கள் அனைவரையும் ஈர்த்தது.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராகவும், தமிழக வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் தொடர்புடையோரை கைது செய்யவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "நாங்கள் நூறு நூறாக கொள்ளையடித்ததாக சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இப்போது கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். ஆவின் பால் ஊழல், நெடுஞ்சாலைத்துறையில் ஊழல், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தில் ஊழல் என ஆயிரம் கோடி, ஐந்தாயிரம் கோடி என சொல்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுக்கட்டத்தான் இங்கே கூடியிருக்கிறோம்" என்றார்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் எழுப்பிய சுவாரசிய முழக்கங்கள்:
கலைஞர் கொண்டு வந்த நோக்கியா
கலைஞர் கொண்டு வந்த நோக்கியா
சொல்லுதே சொல்லுதே
நோ நோ சொல்லுதே
அ.தி.மு.க. ஆட்சியில்
நோ நோ சொல்லுதே!
போகப்போறேன்னு சொல்லுது
போகப்போறேன்னு சொல்லுது
போர்ட் கம்பெனி
போகப்போறேன்னு சொல்லுது
அ.தி.மு.க. ஆட்சியில்
போகப்போறேன்னு சொல்லுது!
என்பதுடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்; நில ஆர்ஜித மசோதாவை கைவிடுக ஆகிய கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications