ஜெ. விடுதலையை எதிர்த்து அப்பீல்- சோனியா மூலம் கர்நாடகா அரசுக்கு திமுக நெருக்கடி?
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாக வேண்டும் என்பதில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூலம் கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கான அஸ்திரங்களை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் கூட்டல் பிழைகள் இருப்பதால் அவர் தவறான தீர்ப்பு வழங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

கர்நாடகா அரசு வழக்கறிஞரான ஆச்சார்யாவும் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் சூத்திரதாரியான சுப்பிரமணியன் சுவாமியோ கர்நாடகா அரசுக்கு கெடு விதித்து காத்துக் கிடக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகளை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழக்கறிஞர்கள் குழு டெல்லி செல்ல இருக்கிறது. டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரையும் சந்தித்து ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்வதற்கான நெருக்கடிகளை ஸ்டாலின் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி அமையும் எனக் கூறப்படும் நிலையில் நடைபெறக் கூடிய இந்த சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications