போராட்டத்தில் பங்கேற்ற திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளிய இளைஞர் அணி நிர்வாகியால் சலசலப்பு
Recommended Video

கரூர்: கரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காவிரி பிரச்சினைக்காக திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தன. கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கமேடு அண்ணா சிலை அருகே வந்திருந்தார். அங்கு ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்றவற்றை திமுகவினர் நடத்தினர்.

அப்போது, தனது இடுப்பில் இளைஞர் அணி நிர்வாகி பிரபாகரன் என்பவர் கிள்ளியதாக ஜெயமணி புகார் தெரிவித்துள்ளார். தனக்கு பின்னால் வந்த பிரபாகரன், திடீரென இடுப்பில் கை வைத்ததாகவும் இதனால் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
நகர செயலாளர் கவனத்திற்கு இதை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என்றும் ஜெயமணி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திமுகவினருடன் ஜெயமணியும் இருந்தார். மாலையில் போலீசார் விடுவித்த போதும், மண்டபம் எதிரில் உட்கார்ந்து, நியாயம் கேட்டு அவர் தர்ணா நடத்தினார். இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!












Click it and Unblock the Notifications