டிவி சேனல்களில் ரஜினிகாந்த் ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம்: ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர்!
தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொலைக்காட்சிகளில் ரஜினி ஆதரவாளர் என யாரையும் குறிப்பிட வேண்டாம் என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அவரது அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு பர தொலைக்காட்சிகள் அதனடிப்படையில் விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் ரஜினி ரசிகர்கள் ரஜினி ஆதரவாளர் என பலர் பங்கேற்று வருகின்றனர்.

தொலைக்காட்சி விவாதங்களில்
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்று சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அங்கீகரிக்கப்பட்டதில்ல
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்று வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதில்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

நியமனம் செய்யப்படவில்லை
ஏற்கனவே தலைவர் ரஜினிகாந்த் கூறியது போல் மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல் கட்சி அறிவிப்பு வரும் வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்க செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டு கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

தொலைக்காட்சிகளுக்கு..
தலைவர் ரஜினிகாந்த் பெயரில் அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதத்தில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனிநபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications