மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: ராஜேஷ் லக்கானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை இனி மறைக்கத் தேவையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

do not need to cover the statues of late leaders: Rajesh lakkani

இந்நிலையில், மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை இனிமேல் மறைக்கத் தேவையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் தேர்தல் விதிப்படி மறைக்கப்பட்டு வந்தன. இதுநாள் வரை காமராஜர், அண்ணா,எம்.ஜி.ஆர் சிலைகள் மறைக்கப்பட்டு வந்தன.

இனி மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை. சந்தேகம் இருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் பெறலாம்' என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+