மனைவியின் காதலனை நந்தினியாக மாறி, மயக்கி மாட்டிவிட்ட கணவன்.. மன்மத சுந்தருக்கு மறக்க முடியாத பாடம்
திருநெல்வேலி: பெண் பெயரில் ஃபேக் ஐடி மூலம் கணவனின் காதலனை மயக்கி, போலீசிடம் மாட்டிவிட்டுள்ளார் கணவர். மனைவியின் காதலனுக்கு கணவன் பாடம் புகட்டிய விவகாரம் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இன்ஸ்டராகிராமில் பழகி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு சிறைபறவையாக கம்பி எண்ணி வரும் மன்மத ராசா மாஸ் சுந்தரை, ஒரு பெண்ணின் கணவர் எப்படி மாட்டிவிட்டார் என்பதை பார்ப்போம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் போட்டோ ஷூட் படங்கள், பணக்கார தோரணை, மயக்க வைக்கும் பேச்சுக்களை நம்பி போகும் பெண்களுக்கு இந்த மன்மத ராசா சுந்தர் ஒரு பாடம் ஆவார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 33 வது இளைஞர் ஒருவருக்கும், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த 28 வயது பெண்ணிற்கும் கடந்த 2021ம் ஆண்டு கயத்தாரில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது. தூத்துக்கு இளைஞர் அந்த பகுதியில் சுயமாக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 2022ம் ஆண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி ஆறு மாதங்கள் கழித்து குழந்தையுடன் வீடு திரும்பி இருக்கிறார்
வீட்டிற்கு வந்ததது முதலே தூத்துக்குடி இளைஞரின் மனைவி செல்போனில் பேசுவதும் இன்ஸ்டாவில் சாட் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கேட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து பார்த்துள்ளார் கணவர், அதில் மாஸ் சுந்தர் 17 என் குறிப்பிட்ட ஐடியில் அடிக்கடி சாட் செய்தது கணவருக்கு தெரியவந்தது. அந்த ஐடி யார் என்று கேட்டதால் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதுடன், விவாகரத்து கேட்டு கணவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தாலும், திருமணம் ஆன இரண்டே ஆண்டில் தனது வாழ்க்கையில் விளையாடி அந்த மாஸ் சுந்தர் யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்கினார் கணவர்.. இதற்கான நந்தினி என்ற பெயரில் போலியாக ஒரு கணக்கு தொடங்கினார். அந்த ஐடி மூலம் மன்மத ராசாவான மாஸ் சுந்தருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வலை தனக்காக விரிக்கப்பட்டது என்று தெரியாமல் மாட்டியிருக்கிறார் மாஸ் சுந்தர்..
பேக் ஐடி: தொடர்ந்து ஆசையுடன் நந்தினியின் பெயரில் இருந்த தூத்துக்குடி இளைஞரிடம் சாட்டிங்கில் பேசி வந்துள்ளார் மாஸ் சுந்தர்.. ஒரு கட்டத்தில் பேச்சு வேறுமாதிரி போயிருக்கிறது. இதனிடையே ஆடையில்லாமல் படங்களை எடுத்து அனுப்ப வேண்டும் என்று நந்தினி ஐடியில் இருந்த தூத்துக்குடி இளைஞருக்கு சுந்தர் கூறியிருக்கிறார்.. ஆனால் தூத்துக்குடி இளைஞர் படங்களை அனுப்புவதாக கூறி தொடர்ந்து சமாளித்து வந்துள்ளார். அதன்பின்னர், தனது ஐடிக்கு மற்ற பெண்கள் அனுப்பி வைத்ததாக கூறி ஏராளமான பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளார் மாஸ் சுந்தர்.
மனைவியின் படங்கள்: அதில் தன்னுடைய மனைவி புகைப்படம் உள்பட பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தூத்துக்குடி இளைஞரால், தன் மனைவியுடன் திருமணத்திற்கு முன்பே பழக்கம் உள்ளதா அல்லது திருமணத்திற்கு பிறகு பழக்கம் ஏற்பட்டதா என்று கண்டறிய முடியவில்லை..
போலீசில் புகார்: இதையடுத்து திருநெல்வேலி காவல் ஆணையரிடம் தனது மனைவியின் காதலன் சுந்தர் குறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்திய திருநெல்வேலி சைபர் கிரைம் போலீசார், திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞரை கைது செய்தனர்.
மார்ப்பிங் வேலை: வேலைக்கு எதுவும் எல்லாம் கையில் ஸ்மார்ட்போனுடன் விதவிதமான ஆடைகள் அணிந்து சுற்றி வந்த சுந்தர், தன்னை வசதி படைத்த இளைஞர் போல் பெண்களிடம் காட்டிக்கொள்வதற்காக போட்டோ ஷூட் நடத்தியும்,இன்ஸ்டாவில் ரீல்ஸ் நடத்தியும் உள்ளார். தன்னை நம்பி பழகும் பெண்களிடம் புகைப்படங்கள் பெற்று ஆபாசமாக மார்ப்பிங் செய்தும், சாட்டிங் விவரங்களை வைத்து மிரட்டியும், பணம் பறித்து வந்தது தெரியவந்தது. சுந்தரின் செல்போனில் மேலும் பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததால், அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications