மத்திய அரசை விமர்சிக்க கூடாது.. அமைச்சர்களுக்கு முதல்வர் திடீர் உத்தரவு.. பின்னணியில் பரபர காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது இடத்தில் அமைச்சர்கள் யாரும் மத்திய அரசை விமர்சிக்க கூடாது என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

பாஜக அரசின் பினாமி அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய அரசை விமர்சிக்க கூடாது என முதல்வர் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

பாஜக அரசின் அன்புக்குறியவராக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஜல்லிக்கட்டுக்கு அவர் அவசர சட்டம் இயற்றியபோது, அதை ஒரே நாளில் மத்திய அரசின் பல துறை அமைச்சகங்களும் ஒப்புதல் அளித்தன. இதனால் பன்னீர்செல்வத்திற்கு நற்பெயர் கிடைத்தது.

சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்

சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்

இந்த நிலையில்தான், பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து கீழிறங்க வைக்கப்பட்டதும், சசிகலா குடும்பத்தார் மீது மத்திய அரசின் அங்கங்களாக உள்ள பல துறைகளும் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. சசிகலா குடும்பம், மத்திய அரசுக்கு நேரடியாக சவால்விடுத்ததாகவே நினைக்கிறது பாஜக. இதனால்தான் கோடை வெயிலை மிஞ்சும் வகையில், உக்கிரமாக கொதிக்கிறது டெல்லி.

எடப்பாடியாரின் காய் நகர்த்தல்

எடப்பாடியாரின் காய் நகர்த்தல்

இந்நிலையில்தான், ஓ.பி.எஸ் இடத்தை தான் வகிக்க ஆசைப்படுகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. 12 எம்எம்எல்ஏக்கள் பலம் கொண்ட பன்னீருக்கு ஆதரவு அளிப்பதை விட எங்கள் அரசுக்கு ஆதரவளித்தால், உங்களுடன் நல்லிணக்கமாக செயல்படுகிறோம் என பாஜக மேலிடத்திற்கும், பிரதமர் மோடிக்கும் சமிக்ஞ்சை கொடுத்துள்ளாராம் எடப்பாடி பழனிச்சாமி.

விமர்சனம் வேண்டாம்

விமர்சனம் வேண்டாம்

இப்பின்னணியில், மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊடங்கங்கள், பொதுக்கூட்டங்களில் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என முதல்வர் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமான சூழல் நிலவுவதாக அப்போது குறிப்பிட்டாராம் முதல்வர்.

மத்திய அரசின் ஆதரவு

மத்திய அரசின் ஆதரவு

எனவே எடப்பாடி பழனிச்சாமியின் காய் நகர்த்தலுக்கு மத்திய அரசும் இசைவு தெரிவித்துவிட்டதாகவே தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அரசின் ஆதரவு கிடைத்தால், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+