சட்டசபையில வம்பிழுத்தா கண்டுக்காதீங்க! தேமுதிகவினருக்கு விஜயகாந்த் அட்வைஸ்
சென்னை: சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சக கட்சி போட்டி எம்.எல்.ஏ.,க்களும், வம்புக்கோ, சண்டைக்கோ இழுத்தாலும், அதை கண்டுகொள்ள வேண்டாம்,'' என, தனது கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத் தொடர் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. புதன்கிழமையன்று விஜயகாந்த்தை தவிர அக்கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சட்டசபைக்கு சென்றனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தவிர, மீதமுள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு, விஜயகாந்த் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் ஒரு மணிநேரம் நடைபெற்றது. அப்போது சட்டசபை நிகழ்ச்சிகளில், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அப்போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேமுதிகவினருக்கு குறி
ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மீதான, "சஸ்பெண்ட்' நடவடிக்கை ரத்தாகியுள்ளது. இருப்பினும், அவர்களையும், மேலும் சில எம்.எல்.ஏ.,க்களையும் ஆளும் கட்சியினரும், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் குறி வைத்துள்ளனர்.

திட்டினா கண்டுக்காதீங்க
சட்டசபையில், வாய் கொடுத்து வம்பு இழுக்க அவர்கள் தயாராகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அவர்கள் சட்டசபையில் எதை பேசினாலும், என்னைப் பற்றி திட்டினாலும் யாரும் கண்டுகொள்ளக்கூடாது.

காதில போட்டுக்காதீங்க!
அவர்கள் சொல்வதை, இந்த காதில் வாங்கி, அந்த காதில் விட்டுவிட வேண்டும் என, விஜயகாந்த் கூறினார். சட்டசபையில் பேச முடியாததை பொதுக்கூட்டங்களில் பேசிக்கொள்வோம்.

மக்கள் பிரச்சினையை பேசுங்க
கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, மக்கள் பிரச்னையை மட்டும், சட்டசபையில் பேசலாம். மக்கள் மன்றத்தில் பேசினால், நம் மீது அவதூறு வழக்குகள் போடுவர். அதை எவ்வாறு சமாளிப்பது என்பது நமக்கு தெரியும் என்றும் விஜயகாந்த் பேசியதாக எம்.எல்.ஏக்கள் கூறினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications