கருணாநிதிக்கு மெரினாவில் இடமளிக்க கூடாது.. எஸ்.குருமூர்த்தி சொல்லும் காரணம்!

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க கூடாது - குருமூர்த்தி

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.

    Dont give a place in Marina for Karunanidhi says S Gurumurthy

    இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது என்று துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி பேட்டியளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் இதுகுறித்து பேட்டியளித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை.

    மெரினாவில் முதல்வராக இருக்கும் போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது.

    முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+