பாலாபிஷேகம் பதிலாக, ரத்த தானம் செய்யுங்கள்.. ரஜினி ரசிகர்களுக்கு பால் முகவர் சங்கம் அன்பு கோரிக்கை
சென்னை: 'கபாலி' திரைப்படம் வெளியாகும்போது, கட்-அவுட்டுக்கு ஊற்றுவதற்காக, பாலை வீணாக்க கூடாது என்று தமிழக பால் டீலர் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில், 1.5 லட்சம் பால் வினியோகஸ்தர்கள் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள்.
வெயிலோ, மழையோ அவர்கள் பணி நிற்பதில்லை. ஆனால் விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆனபோது, சில ரசிகர்கள், பாலை திருடி கட்-அவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர்.
இதுபோன்ற செயல்களை நடிகர்கள் கண்டிக்க வேண்டும். பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும்போது ஏற்படும், பால் வீணாதல் பிரச்சினை கவலை தருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரத்த தானம்
ரஜினி ரசிகர் சங்கங்களையும் தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் பொன்னுசாமி. பாலாபிஷகம் செய்வதற்கு பதில், ரசிகர்கள் ரத்த தானம் செய்யலாம் என்பது பொன்னுசாமி யோசனையாக உள்ளது.

பெங்களூரில் வழக்கு
ரஜினி பட கட்-அவுட்டுகளுக்கு பால் வீணாகும் நிலையில், அவ்வாறு செய்ய கூடாது என்று ரஜினி அறிவுறுத்த வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இன்னும் அது விசாரணை கடத்தில் உள்ளது.

மலர் வீச திட்டம்
இந்நிலையில், கபாலி திரைப்படம் வெளியாகும்போது, பால் ஊற்றி அபிஷேகம் செய்வதற்கு பதிலாக மலர் தூவி தங்கள் அபிமானத்தை வெளிக்காட்ட ரஜினி ரசிகர்களில் பெரும்பாலானோர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிலும்
சென்னையில்தான் இதுபோல ரசிகர்கள் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் என்பதில்லை. ரஜினியின், எந்திரன் திரைப்படம் வெளியாகும்போது அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் கூட பாலாபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications