அப்பல்லோவில் அனுமதித்ததும் ஜெ. இட்லி சாப்பிட்டாரா? டாக்டர். பாலாஜி புது தகவல்!
தொடக்கத்தில் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டதாக மருத்துவர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை: அப்பலோ மருத்துவமனையில் கடைசி வரை ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்ததாகவும், ஜெயலலிதா தொடக்கத்தில் இட்லி சாப்பிடவில்லை நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்றும் மருத்துவர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததில் எழுந்த சந்தேகம் தொடர்பாக விளக்கம் அளிக்க டாக்டர் பாலாஜிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று டாக்டர் பாலாஜி நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜரானார்.
அப்போது ஆறுமுகசாமி கமிஷனிடம் அவர் பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடக்க நாள் முதல் கடைசி வரை சசிகலா உடன் இருந்ததாக கூறியுள்ளார்.

சிகிச்சை அளித்தது யார்?
ஜெயலலிதாவிற்கு தான் சிகிச்சை அளிக்கவில்லை என்றும், லண்டன் மருத்துவர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் மட்டுமே சிகிச்சை அளித்தனர். ஐதராபாத், பெங்களூரில் இருந்தும் சில மருத்துவர்கள் வந்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

ஜெ. விரும்பவில்லை
சிகிச்சைக்காக லண்டன் செல்வதை ஜெயலலிதா மறுத்ததாகவும் டாக்டர் பாலாஜி கூறி இருக்கிறார். மேலும் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட 5 மருத்துவர்கள் குழுவில் தான் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அவரது கைரேகை பதிவு செய்யப்பட்ட போது நான் அவருக்கு அருகில் தான் இருந்தேன், அவர் அப்போது சுயநினைவோடு தான் இருந்தார் என்றும் கூறியுள்ளார்.

நீராகாரம் எடுத்துக் கொண்டார்
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா இல்லையா என்ற சர்ச்சைக்கும் டாக்டர் பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜெயலலிதா தொடக்கத்தில் இட்லி சாப்பிடவில்லை, நீராகாரம் மட்டும் எடுத்துக் கொண்டார் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

டிசம்பர் 27ல் மீண்டும் விசாரணை
டாக்டர் பாலாஜி அளித்த வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஆறுமுகசாமி கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணைக்கு டிசம்பர் 27ம் தேதி ஆஜராகும்படி டாக்டர் பாலாஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications