தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா, விஜயகாந்த்தெல்லாம் ஒரு தலைவரா... ராமதாஸ் செம தாக்கு!
சென்னை: தேமுதிகவையும், விஜயகாந்த்தையும் நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதெல்லாம் ஒரு கட்சியா, அவரெல்லாம் ஒரு தலைவரா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.
அந்தக் கட்சிக்கு என்று எந்த செயல் திட்டமும் இல்லை, கொள்கையும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் ராமதாஸ் கூறியிருப்பதாவது:

விஜயகாந்த்தெல்லாம் தலைவரா?
சமீபத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களோடும் பிரதமரைச் சந்திக்க விஜயகாந்த் டெல்லி சென்றபோது, பா.ம.க-வுக்குப் பல முறை அழைப்புவிடுத்தும் நீங்கள் அந்த அழைப்பை நிராகரித்து, அந்தப் பயணத்தையே புறக்கணித்தீர்களே ஏன்?'
'தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ, விஜயகாந்தை ஒரு தலைவராகவோகூட நாங்கள் கருதவில்லை. அந்தக் கட்சிக்கென என்ன செயல்திட்டம், கொள்கை உள்ளது? நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்த முதல் நிபந்தனையே தே.மு.தி.க கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்பதுதான். ஆனால், அவர்கள் அதைக் கேட்கவில்லை.

தரத்தைக் குறைக்க விரும்பவில்லை
இதனால் ஈடுபாடு காட்டாமல் வேண்டா வெறுப்பாகத்தான் அந்தக் கூட்டணியில் இருந்தோம். இது மாதிரி ஒரு நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கிக்கொண்டோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

திமுகவும், தேமுதிகவும் புறக்கணிக்கப்பட்டவை
தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் சட்டமன்றத் தேர்தல் அரங்கில் நெருங்கி வருவதுபோலத் தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், வட மாவட்டங்களில் பா.ம.க அதை எப்படி எதிர்கொள்ளும்?'
தே.மு.தி.க., தி.மு.க இரு கட்சிகளுமே மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகள். பாரம்பரியம்மிக்க தி.மு.க-வால் ஒரு நாடாளுமன்ற தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், நாங்கள் எங்களின் சொந்த பலத்தில் வென்றிருக்கிறோம். ஆக, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க யார் வந்தாலும் சரி, நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று. நாங்களே வெல்வோம்.

கண்ணியமான அரசியல் செய்கிறோம்
பா.ம.க அனைத்துத் தரப்பினரோடும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், அரசியல் அரங்கில் நீங்கள் தனித்துவிடப்படும் அறிகுறிகள் தென்படுகின்றனவே?
நாங்கள் தனித்துவத்தோடு அரசியல் செய்கிறோம். கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம். நாங்கள் தனித்துவிடப்படுகிறோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எங்களைத் தனிமைப்படுத்த நினைப்பவர்கள் எங்களைப்போல தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும் யார் மக்களோடு இருக்கிறார்கள் என்று.

இதுவா ஆரோக்கியமான அரசியல்?
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு, மோடி வாழ்த்துச் சொல்கிறார்; பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜ.க-வினர் பங்கேற்கிறார்கள். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதாக தமிழக பா.ஜ.க சொல்கிறது. இது அரசியல் நாகரிகமா... நாடகமா?
இதை எப்படி ஆரோக்கியமான அரசியல் எனச் சொல்ல முடியும்? அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பா.ஜ.க தன் நிலையை மாற்றிக்கொள்கிறது. இவ்வளவு பெரிய ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த நான்கு ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்கள் சொல்லி மாளாது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்
நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம். பொதுப்பணித் துறை ஊழல் அதிகாரிகளின் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசை, பா.ஜ.க பாராட்டுவது நாகரிகமாகத் தெரியவில்லை. அதுபோல நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்குச் சென்ற ஜெயலலிதா, ஜாமீனில் வந்த பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான் வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மிகப் பெரிய கேள்விக்குறி
இப்போது பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. பா.ஜ.க-வினர் அவசர அவசரமாக வாழ்த்துகிறார்கள். இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிகப் பெரிய கேள்விகளை உருவாக்கியிருக்கின்றன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
-
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications