சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு... திராவிட இயக்கங்களின் ஏமாற்று வேலை இனி பலிக்காது... பொன்.ராதா
தஞ்சை: சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழியையும், தமிழர்களையும் சீரழித்து வரும் திராவிடக் கட்சிகள், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அழிக்க முயல்வதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இந்திய - இலங்கை அரசுகள் இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, தமிழக மீனவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகளை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மத்திய அரசால் தீர்வு காண முடியும்.
சமஸ்கிருதம், ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மொழியையும், தமிழர்களையும் சீரழித்து வரும் திராவிடக் கட்சிகள், இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அழிக்க முயல்கின்றன.
கேரள, கர்நாடக, ஆந்திர மக்கள் ஹிந்தி படிப்பதால், அவர்களது தாய் மொழி அழிந்துவிடவில்லை. மாறாக, அவர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். தமிழகம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் தற்போது இல்லை. எனவே திராவிட இயக்கங்களின் ஏமாற்று வேலை இனி பலிக்காது என்று கூறினார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications